சென்னை: கடந்த சில நாள்களாக டிக்-டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக ரவுடிபேபி சூர்யா குடும்பப் பிரச்சினைகளில் சிக்கி கஷ்டத்தில் இருக்கும் பெண்களை குறிவைத்து, அவர்களை மூளைச்சலவை செய்து வெளிநாடுகளுக்கு பாலியல் தொழிலுக்காக அனுப்பி வருவதாகவும், இதனைக் தட்டிக்கேட்கும் குடும்பப் பெண்கள் முதல் சிறுமிகள், குழந்தைகள் என அனைவரது புகைப்படங்களையும் மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியும் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த தனம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் புகார் அளித்தனர். இந்தப் புகாரானது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று (நவ.29) மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த தனம் ரவுடி பேபி சூர்யாவை உடனடியாக கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாளைக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய தனம், "ரவுடி பேபி சூர்யாவின் அடாவடித்தனத்தைத் தட்டிக் கேட்டதற்காக அவர் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார். எனது குழந்தைகள் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போனை பயன்படுத்தி வந்தனர்.