தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்த ஊழியர்: இழப்பீடு வழங்கக்கோரி தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் - தனியார் நிறுவனத்திக்கு நோட்டீஸ்

சென்னை: உரிய நோட்டீஸ் வழங்காமல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், கரோனாவால் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு 1 கோடியே 50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உயிரிழந்தவரின் மனைவி தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ந

By

Published : Oct 1, 2021, 6:12 PM IST

சென்னையைச் சேர்ந்த ரமேஷ் சுப்பிரமணியன், தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் இருந்து உரிய காரணங்கள் ஏதுமின்றி ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார்.

நிறுவன ஒப்பந்தத்தின்படி 2 மாதம் தன்னைப் பணி செய்ய அனுமதிக்கும்படி ரமேஷ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டும்; அதை ஏற்க மறுத்த நிறுவனம், உடனடியாக அவரை ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் கட்டாயத்தால் ஏப்ரல் 13ஆம் தேதி ராஜினாமா செய்த ரமேஷ், கரோனா வைரஸ் பாதிப்பால் ஜூன் 11ஆம் தேதி மரணமடைந்தார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இதுகுறித்து தெரிவித்தும் 2 லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்க முன்வந்ததாகத் தெரிகிறது.

ஆண்டிற்கு 30 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் தனது கணவர் உயிரிழப்புக்கு உரிய இழப்பீடு வழங்காத தனியார் நிறுவனம் தனக்கு 1 கோடியே 50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உயிரிழந்த ரமேஷின் மனைவி காமேஸ்வரி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: காவலர்களால் தாக்கப்பட்ட நடத்துனருக்கு இழப்பீடு

ABOUT THE AUTHOR

...view details