தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு - தமிழக ஆளுநர் ஆர் என் ரவி

5 நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனி விமானம் மூலம் சென்னை வருகை
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனி விமானம் மூலம் சென்னை வருகை

By

Published : May 25, 2022, 2:18 PM IST

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 1.7 கோடி மதிப்பீட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மே 28ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர் மெய்யநாதன் அரசு உயர் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனி விமானம் மூலம் சென்னை வருகை

இதையும் படிங்க:ஆழ்கடல் தனியார் சொகுசு கப்பல் சேவை - ஜூன் 4ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details