சென்னை: குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தன்கர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வரும் 28ம் தேதி தமிழ்நாடு வருகிறார். அவர் சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். குடியரசு துணைத் தலைவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழகம் வர உள்ள நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
குடியரசு துணைத் தலைவர் தமிழ்நாடு வருகை: தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை! - குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர்
குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தன்கர் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தமிழ்நாடு வருவதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
துணை ஜனாதிபதி தமிழகம் வருகையையொட்டி தலைமை செயலாளர் தாயோயன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், ஆளுநரின் முதன்மைச் செயலாளர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையாளர், பொதுத் துறை அரசு செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன், பெருநகர சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையாளர், இராணுவம், கப்பற்படை, காவல் துறை மற்றும் தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "ரவி சார் நீங்க சங்கி அல்ல அறிவாளி" - காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்