தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை - விஜயவாடா ரயிலில் பயணம் செய்த வெங்கையா நாயுடு - வெங்கையா நாயுடு ரயில் பயணம்

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திரா மாநிலம், விஜயவாடாவிற்கு ரயிலில் புறப்பட்டுச் சென்றார்.

வெங்கையா நாயுடு
வெங்கையா நாயுடு

By

Published : Jan 17, 2022, 6:48 PM IST

சென்னை:குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து இன்று (ஜன.17) ஆந்திரா மாநிலம், விஜயவாடாவிற்கு ரயிலில் புறப்பட்டுச் சென்றார்.

இதற்காக அவரை ரயில் நிலையத்தில் சென்று தமிழ்நாடு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழியனுப்பி வைத்தார். காவல்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆகியோரும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.

முன்னதாக அவர் மோசமான வானிலை காரணமாக விமானப் பயணத்தை தவிர்த்து, ரயிலில் விஜயவாடா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்க வாய்ப்பு?

ABOUT THE AUTHOR

...view details