சென்னையில் நேற்று மிருதங்க வித்வான் உமையாள்புரம் கே. சிவராமன், ராமசாமி ஆகியோர் எழுதிய ‘மிருதங்கத்தின் இசைச் சிறப்பு’ என்ற நூலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, “இசைதான் எல்லாம். இசையால்தான் மனதிற்கு ஏற்ற நல்ல ஊட்டச்சத்தை கொடுக்க முடியும். மன அழுத்தத்திலிருந்து விடுபட இசையே அருமருந்தாகும். அப்படி நம்முடைய பாரம்பரிய இசைகளை வளர்ப்பதும், பாரமரிப்பதும்தான் நம்முடைய கடமை. அதில் ஒன்றான மிருதங்கம் ரம்மியமான இசையை தரக்கூடியது. மிருதங்கம் நமது கலாசாரம், சமயத்தினஅ ஒரு பகுதியாக உள்ளது” என்றார்.