இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கையாண்டு வருகிறது. கட்டுப்பாடுகளைத் தளர்த்தாமல் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றும் அறிவித்துள்ளது. அதற்காக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் ஏற்கனவே அத்தியாவசிய பொருள்களை இலவசமாக ரேஷன் கடைகளில் அரசு வழங்கியது. மே மாதத்திற்கும் விரைவில் வழங்கவிருப்பதாகவும் தற்போது அறிவித்துள்ளது.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் பழனிச்சாமியுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். அதைக் கேட்ட பின் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகப் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர் - கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்படுவதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளார்
கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்படுவதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளார்.
![தமிழ்நாடு அரசைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர் Vice President Venkaiah Naidu praised the TN government for doing better in preventing corona](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6893733-thumbnail-3x2-hda.jpg)
Vice President Venkaiah Naidu praised the TN government for doing better in preventing corona