தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று நாள் பயணமாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை! - ஆளுநர் மாளிகை

மூன்று நாள் பயணமாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மூன்று நாள் பயணமாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை!
மூன்று நாள் பயணமாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை!

By

Published : Jun 27, 2022, 12:46 PM IST

சென்னை:குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாள் பயணமாக டெல்லியில் இருந்து ராணுவ விமானத்தில் இன்று (ஜூன் 27) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். பின்னர், வரும் 29 ஆம் தேதி சென்னை அருகே கேளம்பாக்கம் விஐடி கல்லூரியில் நடைபெறும் விழாவில் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார். விழாவை முடித்துக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவரின் பயணத்தை தொடர்ந்து , விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் கேளம்பாக்கம் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஐபிஎல் ஏலம் போல் அதிமுக நிர்வாகிகளை பல கோடி கொடுத்து வாங்கிய எடப்பாடி - டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details