சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்றக் குழு நேற்று (செப்.14) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் குறிப்பாக புதிய பாடத் திட்டமாக 'சமுதாய நீதி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பி.ஏ சைக்காலஜி மற்றும் சோஷியாலஜி படிப்பவர்களுக்கு சமுதாய நீதி பாடத்திட்டம் ஏற்கனவே இருந்து வருகிறது. இந்தப் பாடத்திட்டத்தை இளங்கலையில் பிற பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களும் கற்றால் அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
எனவே வரும் கல்வியாண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இப்பாடம் விருப்பப் பாடமாக கற்பிக்கப்படும்.