இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் உள்ள தனிச்சிறப்பில் முக்கியமானது இங்கு மத அரசியல் செய்ய முடியாதது. இந்துவாய் இணைவோம் என அடுத்தடுத்து பரப்புரை மேற்கொண்ட போதிலும் கூட பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை என்பதே நிசர்சனமான உண்மை.
இந்நிலையில், தாமரையை தமிழ்நாட்டில் மலரவிடுவோம். அதற்காக வெற்றிவேல் யாத்திரையை நடத்துவோம் என தமிழக பாஜக தெரிவித்திருந்தது.
கந்தசஷ்டி விவகாரம் சர்ச்சையில் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதற்காக, பாஜக தமிழ் கடவுள் முருகனைக் கையில் எடுத்தது.
அதே சமயம் இந்த யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்திவருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணனும் இதை அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் வெற்றிவேல் யாத்திரை தேதியை பாஜக அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியிலிருந்து வேல் யாத்திரை பாஜக தமிழ்நாடு தலைவர் எல்.முருகன் தலைமையில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பாஜகவின் ரத யாத்திரையை தடை செய்யக்கோரி காங்கிரஸ் புகார்