கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரியில் 120 இடங்கள், நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய கால்நடை மருத்துவக் கல்லுாரிகளில் தலா 80 இடங்கள் என 360 இடங்கள் உள்ளன. மேலும், உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பில் சென்னை கொடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லுாரியில் 40 இடங்களும், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 20 இடங்களும், ஒசூர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக்கல்லுாரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 40 இடங்களும் உள்ளன.
இந்த இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் இன்று (மே 8) காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பம் மற்றும் தகுந்த சான்றிதழ்களின் நகல்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியப் பின்னர், ஒவ்வொரு பட்டப்படிப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தையும் தனித்தனியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.