மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் (NIPER) Veterinary Officer பணிக்கு 6 நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பணிக்கு விண்னப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.
காலிப்பணியிடங்கள்: Veterinary Officer - 6
வயது வரம்பு:விண்ணப்பதாரர்கள் 19.09.2022 படி, அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Animal Breading பாடப்பிரிவில் B.V.Sc, M.V.Sc Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
Veterinary Council of India-வில் பதிவு செய்த நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
அனுபவம்:விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் Animal breeding போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
சம்பளம்:இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது Level 10 என்ற ஊதிய அளவின் படி ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
தேர்வு செய்யும் விதம்:விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWD / Female ஆகியவர்களை தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.1,000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் http://niper.gov.in/2022_adv_10_applicationform.pdf என்ற அதிகாரபூர்வ பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து recruitmentcell@niper.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (19.09.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
இதையும் படிங்க:ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அலுவலர்களுக்கான தேர்வு தேதி மாற்றம் - TNPSC அறிவிப்பு