சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 1141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
தற்காலிக பணி ஒதுக்கீடு
அதன் அடிப்படையில் அவர்களுக்கு தற்காலிக பணி ஒதுக்கீட்டு ஆணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்டது. ஆனால் கால்நடை மருத்துவத் துறையில் இருந்து பணி நியமனத்திற்கான ஆணை தற்போது வரை வழங்கவில்லை.
கால்நடை உதவி மருத்துவர்கள் போராட்டம் பணி நியமன ஆணை இல்லை
எனவே தங்களுக்கு கால்நடை உதவி மருத்துவர் பணியிடத்திற்கான நியமன ஆணை விரைந்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (ஜூலை 29) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது பேசிய கால்நடை மருத்துவர் நவீன், "பணி நியமன ஆணை இல்லாததால் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறோம். எனவே பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்