சென்னை:வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறியதாவது, “தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் உதவித் தொகையாக 10ஆயிரத்து 500 மட்டுமே வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு இணையாக 25ஆயிரம் ரூபாயும் அதனுடன் ஆண்டுதோறும் 3 விழுக்காடு உயர்வும் உயர்த்தப்பட வேண்டும்.
மேலும் 2017-18 ஆம் ஆண்டு மாணவர்களின் பயிற்சி மருத்துவம் இன்று ஆரம்பமாகிறது பயிற்சி தொடங்கும் முன்பே உதவித்தொகையை வழங்க வேண்டும் என ஏற்கனவே போராட்டம் நடத்தியும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படவில்லை.
இது குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தோம். அந்த மனுவிற்கு எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. கால்நடைத்துறை அமைச்சரை சந்தித்து எங்களின் கோரிக்கையை முன்வைத்தும் அதிலும் தீர்வு எட்டப்படவில்லை. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடவுள்ளோம்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் லிஃப்டில் சிக்கிய மகாராஷ்டிர குடும்பத்தினர் - சாதுர்யமாக மீட்ட காவலர்களுக்கு குவியும் பாராட்டு