தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: நாளை தீர்ப்பு! - உயர் நீதிமன்றம்

சென்னை: தனக்கு எதிரானத் தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி கனிமொழி தாக்கல் செய்த மனு மீதானத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளைய தினத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

verdict-is-going-annuounced-by-tomorrow-in-kanimozhi-election-case

By

Published : Nov 18, 2019, 4:48 PM IST

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்.பி.,யின் வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளர் சந்தான குமார், தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி கனிமொழி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், மனு தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வாக்காளர் சந்தானகுமார் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

கனிமொழி தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை நாளை தாக்கல் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப்பதிவு செய்த நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழியின் மனு மீது நாளை தீர்ப்பளிக்கப்படும் என தெரிவித்து, விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ஃபாத்திமா தற்கொலையில் யாரைப் பாதுகாக்க முயற்சி நடக்கிறது' - மக்களவையில் கனிமொழி எம்.பி., கேள்வி

ABOUT THE AUTHOR

...view details