தமிழ்நாட்டில் தற்போது 969 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சிலருக்கு சிகிச்சையளித்த 8 மருத்துவா்களுக்கு அந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் கரோனா பரிசோதனைகளை பாதுகாப்புடன் மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கண்ணாடிக்கு உள்ளே இருந்து சிகிச்சை அளிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதனால் நோயாளிகளை தொடாமலேயே பரிசோதனைகளையும் சில சிகிச்சைகளையும் செய்ய முடிகிறது.
கரோனா நோயாளிக்கு வென்டிலேட்டர் பொருத்த புதியமுறை கரோனா நோயாளிகளுக்கு வென்ட்டிலேட்டா் சாதனங்கள் பொருத்தும்போது நோயாளிகளுக்கு மிக அருகில் மருத்துவா்கள் செல்ல வேண்டியிருக்கும். மருத்துவர்கள் பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருந்தாலும், இதுபோன்ற சந்தா்ப்பங்களில் வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளது.
அதனைத் தவிர்க்கும் வகையிலேயே ‘இன்டியூபேஷன் பாக்ஸ்’ முறை பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, அந்த பெட்டகத்தில் 3 துளைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அவற்றில் கையுறைகள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் அருகில் செல்லாமல், அவர்களுக்கு தேவையான பரிசோதனை, செயற்கை சுவாச சிகிச்சைகளை அளிக்க முடியும். தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்டியூபேஷன் பாக்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் வாசிங்க: ’இவன் கரோனாவை பரப்ப வந்துருக்கான்’ - அச்சத்தில் இளைஞர் அடித்துக் கொலை