சென்னை: கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம், வெண்ணிலா கபடி குழு. இப்படத்தில் நடிகர் மாயி சுந்தர் (50) துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் வெண்ணிலா கபடி குழு மட்டுமல்லாது துள்ளாத மனமும் துள்ளும், குள்ளநரி கூட்டம், மிளகா, சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு நடிகர் மாயி சுந்தர் காலமானார் - actors death in 2022
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் துணை நடிகர் மாயி சுந்தர் மன்னார்குடியில் காலமானார்.
வெண்ணிலா கபடி குழு நடிகர் மாயி சுந்தர் காலமானார்!
திருமணமே செய்து கொள்ளாத நடிகர் மாயி சுந்தர், தனது சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்சள் காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று (டிச.24) அதிகாலை 2.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். சில வாரங்களுக்கு முன்பு இதே படத்தில் நடித்திருந்த நடிகர் ஹரி வைரவன் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வாரிசு, துணிவு குறித்து வடிவேலு கூறிய பதில் என்ன?