சென்னையில் ஆவடி அருகே வீராபுரத்தில் தனியார் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. அதில் கலைக் கல்லூரியில் மாணவன் சுதர்சனம் பி.காம். மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.
இவர், கல்லூரி மூன்றாம் தளத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர், மாணவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.