தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலை துணைவேந்தராக ஆர். வேல்ராஜ் நியமனம் - ஆர்.வேல்ராஜ்

துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு
துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு

By

Published : Aug 10, 2021, 1:52 PM IST

Updated : Aug 10, 2021, 4:16 PM IST

13:50 August 10

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய துணை வேந்தராக வேல்ராஜை நியமனம் செய்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதிவிகாலம் முடிவடைந்ததையடுத்து, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தலைமையில் அடுத்த துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைகழகத்தின் விருப்பம் தெரிவிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆன்லைன் மூலம் 160 பேராசிரியர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அதிலிருந்து 10 பேரை நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்கள் என தேர்வுக் குழு இறுதி செய்தது.

துணைவேந்தர் அவர்?  

இதில் தகுதி வாய்ந்த 10 நபர்களுக்கு நேற்று (ஆக. 9) நேர்காணல் நடத்தி, அவர்களில் தகுதியான 3 நபர்களின் பெயர் பட்டியலை ஆளுநரிடம் தேர்வு குழு வழங்கியது. 

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர். வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டார். இவர் பதவி ஏற்றதில் இருந்து மூன்று ஆண்டுகள் பணியில் இருப்பார் என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

ஆர். வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்தில் எரிசக்தி துறையில் 33 ஆண்டுகள் பேராசிரியராகவும், துறையின் இயக்குனராகவும் பணிபுரிந்தவர். மேல் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு துறையில் பணிபுரிந்து அனுபவம் பெற்றுள்ளார். 

3 ஆராய்ச்சி படிப்புகள்

இவர் 193 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளதுடன், 29 சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டு உள்ளார். மூன்று புத்தகங்களை எழுதியுள்ள இவர் 33 ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.  

மேலும் சர்வதேச கருத்தரங்குகளை நடத்திய அனுபவம் பெற்றுள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் 3 ஆராய்ச்சி படிப்புகளையும், 9 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கியுள்ளார். வெளிநாடுகளுக்கு சென்று கல்வியில் பணியில் ஈடுபட்ட அனுபவம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள்...மாநில இடஒதுக்கீடு எப்படி பொருந்தும் - உயர் நீதிமன்றம் கேள்வி 

Last Updated : Aug 10, 2021, 4:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details