தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உட்பட இந்தியாவின் 543 தொகுதிகளுக்கும் ஏழு கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தேர்தல் நடக்க அறிவிப்பு வெளியானது. தமிழ்நாட்டில், வேலூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் பெறப்பட்டு திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். இதனைத் தொடர்ந்து, துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனையில் பணம் பிடிபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இதனால், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.
வேலூர் தொகுதி காலி - மத்திய அரசிதழில் வெளியீடு
சென்னை: மக்களவைத் தேர்தலில் தள்ளிவைக்கப்பட்டுள்ள வேலூர் தொகுதி காலியாக உள்ளது என்று மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில், வேலூர் தவிர இந்தியா முழுவதும் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23ஆம் தேதி எண்ணப்பட்டது. அதில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தால் குடியரசு தலைவரிடம் அளிக்கப்பட்டது. இதில், 17ஆவது நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியுள்ள 542 மக்களவை உறுப்பினர்களின் பெயர்களை மத்திய அரசிதழில் குடியரசு தலைவர் வெளியிட்டுள்ளார்.
வாரணாசி தொகுதியில் வெற்றிபெற்ற பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் உள்ளிட்ட தலைவர்களின் பெயர் அதில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதிமாறன், ரவீந்திரநாத் குமார் ஆகியோரது பெயரும் இடம் பெற்றுள்ளது. பின்னர் அந்த இதழில், வேலூர் மக்களவைத் தொகுதி காலியாக உள்ளது என்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.