தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அந்நிய முதலீட்டை எதிர்க்கும் கட்சிக்கே ஆதரவு!' - வெள்ளையன் அறிவிப்பு

சென்னை: வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் கட்சிக்கே வணிகர்களின் ஆதரவு என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

வெள்ளையன் செய்தியாளர்கள் சந்திப்பு

By

Published : Apr 6, 2019, 10:45 PM IST

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

"அந்நிய ஆதிக்கத்தை முறியடிப்போம் மற்றும் அந்நிய வணிகத்தை ஆதரிக்கமாட்டோம் என எழுத்துபூர்வமாக எந்த கட்சி, எங்களுக்கு பதில் அளிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவோம். இதுவரையில் ஒரு கட்சி மட்டுமே பதிலளித்துள்ளது.

வரும் 10ஆம் தேதி வரை கட்சிகளின் எழுத்து பூர்வமான பதிலை எதிர்பார்க்கிறோம். 12ஆம் தேதி எந்த கட்சிக்கு வாக்களிக்கலாம் என அறிவிக்க இருக்கிறோம். வெளிநாட்டு வணிகத்தை வைத்து தமிழ்நாடு வணிகத்தை சீர்குலைக்க செய்கின்றனர்.

வெள்ளையன் செய்தியாளர்கள் சந்திப்பு

காங்கிரஸ் ஆட்சியில் தான் நிறைய வெளிநாட்டுகாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் தயாநிதி மாறனும் அடங்குவார். காங்கிரஸ் அரசாங்கம்தான் வெளிநாட்டுகாரர்கள் உள்ளே வர கதவை திறந்து வைத்தது. ஆனால் பாஜக, அந்த கதவை மூடாமல் கதவையே கழற்றி வைத்து விட்டது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details