வெள்ளைக்கோவில் சாமிநாதனுக்கு திமுகவில் புதிய பதவி - Today
2019-07-04 16:16:13
சென்னை: திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட வெள்ளக்கோவில் சாமிநாதன், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக கட்சியில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞரணிச் செயலாளராக பதவி வகித்த ஸ்டாலின், தலைவராகும் நேரத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளைக்கோவில் சாமிநாதன் திமுக இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இளைஞரணியின் செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதன், உதயநிதி ஸ்டாலினுக்கு வழிவிடும் வகையில், திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.