தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீரில் சிக்கிய பொதுமக்களை மீட்ட வேளச்சேரி காவல் துறையினர்! - Velachery Rain Damage

சென்னை: வேளச்சேரியில் மழைநீரில் சிக்கித் தவித்த பொதுமக்களை காவல் துறையினர் மீட்டு வேறு இடத்திற்கு அனுப்பிவைத்தனர்.

வேளச்சேரி நிவர் புயல் பாதிப்பு  வேளச்சேரி மழை பாதிப்பு  Velachery police rescue civilians trapped in rain water  Nivar Storm Damage In Velachery  Velachery Rain Damage
Velachery police rescue civilians trapped in rain water

By

Published : Nov 25, 2020, 4:26 PM IST

நிவர் புயல் காரணமாக சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாள்களாகத் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை வேளச்சேரி பகுதியில் நேற்றிரவு முதல் கனமழை பெய்துவந்தது.

இந்நிலையில், வேளச்சேரி ராம்நகர் பகுதியில் மழை நீரானது முழங்கால் அளவிற்குத் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் தவிர்க்க, பொதுமக்களை அவ்வழியாக அனுமதிக்காமல் வேறு வழியில் சுற்றிச் செல்லுமாறு வேளச்சேரி காவல் துறையினர் வாகனங்களை நிறுத்தி அறிவுறுத்திவருகின்றனர்.

மேலும் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். இதனால், காவல் துறையினர் மழைநீரில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டு வேறு இடத்திற்கு அனுப்பிவைத்தனர்.

அதேபோல், தேங்கிய மழைநீரை மின் மோட்டார் வைத்து உடனடியாக அகற்ற மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வெள்ளப் பெருக்கு அபாயம்: அடையாறு ஆற்றை ஆய்வு செய்தார் ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details