சென்னை: நாள்தோறும் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டம் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, வேளச்சேரி மேம்பாலத்திற்கு 2016ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பாக, மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்த இரண்டு பாலங்களை விரைவில் திறக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு முன்பாக பாலங்களை திறக்க அலுவலர்கள் முடிவெடுத்தனர்.
இந்நிலையில், வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களைக் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இரு பாலங்களையும், முதலமைச்சர் ஸ்டாலின் நவம்பர் 1ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
இதையும் படிங்க:கீழடி அகழாய்வு தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு