சென்னை: கே.கே.நகரிலிருந்து நெசப்பாக்கம் செல்லும் அண்ணா மெயின் சாலையில் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முன் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதில் அங்கு நின்றுகொண்டிருந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடந்த ஆண்டு முதல் இந்த சாலையில் ஆறுமுறை பள்ளம் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி மத்திய வட்டார கண்காணிப்புப்பொறியாளர் கூறுகையில், " சைதாப்பேட்டை, அசோக் நகர், ஈக்காட்டுத்தாஙகல் வழியாக நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் கொண்டு வந்து சேர்க்கும் ராட்சத குழாய்கள் இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ளன.
அவற்றை அமைத்து 20 வருடங்கள் ஆகிவிட்டதால், தொடர்ந்து அவற்றில் ஏற்படும் பாதிப்புகளால் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படுகின்றன. இந்தக் குழாய்களை மறு சீரமைப்பு செய்வதற்கான விவரங்கள் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்" என தெரிவித்தார்.
இந்த பள்ளம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், "தற்போது அமைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் சுமார் 10 வருடங்களே கழிவுநீரினால் உருவாகும் அமில வாயுக்களைத் தாங்கும். அவற்றை சென்னை மாநகராட்சி 20 வருடங்களாக பராமரிப்பின்றி வைத்துள்ளது.