சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன், தொலைபேசி வாயிலாக மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த விவரங்களை இணையதளம், நம்ம சென்னை செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மளிகை பொருள்கள் அவர்களின் பகுதிகளிலேயே கிடைக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் வணிகர் சங்கங்களுடன் இணைந்து நடமாடும் வாகனங்கள், ஆன்லைன், தொலைபேசி ஆர்டர்களின் மூலம் 31ஆம் தேதி முதல் நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்யச் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.