தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு தளர்வு - காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பு! - காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பு

சென்னை: பொது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சென்னையில் காய்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Vegetable
Vegetable

By

Published : Jun 7, 2021, 3:59 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன்.7) முதல் பொது முடக்க விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள காய்கறி, பழக் கடைகள், மளிகை கடைகள் மற்ற அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள் நடமாடும் வண்டிகள் மூலமாக விற்கப்பட்டு வந்தது. இதனால் மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளைவிட இதன் விலை சற்று அதிகமாக இருந்தது. சில இடங்களில் காய்கறிகள் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இன்றைய தினம் (ஜூன்.7) சென்னை கோயம்பேடு மொத்த விலை சந்தையில் தக்காளி கிலோ ஒன்று 7 முதல் 10 ரூபாய் வரையும் சில்லறை விலையில் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உருளைக்கிழங்கு 14 முதல் 17 ரூபாய் வரை மொத்த விலைக்கடைகளில் விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் 25 ரூபாயாக அதன் விலை உள்ளது.

பெரிய வெங்காயம் 16 முதல் 24 ரூபாயாக மொத்த விலையிலும், சில்லறை விற்பனையில் 30 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயம் மொத்த விலையில் 40 முதல் 60 ரூபாயாகவும், சில்லறை விலையில் 70 ரூபாயாகவும் உள்ளது.

கத்திரிக்காய் 16 முதல் 30 ரூபாய் வரைக்கும், முட்டை கோஸ் 4 முதல் 16 ரூபாய்க்கும், பீன்ஸ் 60 முதல் 80 ரூபாய் வரைக்கும், அவரைக்காய் 40 முதல் 60 ரூபாய் வரைக்கும், கேரட் 25 முதல் 40 ரூபாய் வரைக்கும், முள்ளங்கி 16 முதல் 40 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் 20 முதல் 40 ரூபாய் வரையும், முருங்கைகாய் 25 முதல் 50 ரூபாய் வரையும், பீட்ரூட் 17 முதல் 35 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. மாங்காய் ஒன்று 30 ரூபாய் வரையும், தேங்காய் ஒன்று அதிகபட்சமாக 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலை நேற்றை விட பெரிய அளவுக்கு மாற்றம் காணாவிட்டாலும் அடுத்து வரும் நாட்களில் பொதுமக்கள் சில்லறை விற்பனை கடைகளில் குறைந்த விலைக்கு காய்கறிகள் வாங்கிச் செல்ல முடியும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details