இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பல்வேறு சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும், வித்தைகளையும் சிறிதும் ‘‘லஜ்ஜையில்லாமல்’’ கடைப்பிடித்து, எக்கட்சியைப் பிடித்தாவது, மீண்டும் இரண்டாவது முறை பதவிக்கு வந்து விட வேண்டும் என்று பாஜக தந்திரங்களை வகுத்து வருகிறது. இதை முறியடிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி வகுத்துள்ள அரசியல் வியூகம் வரவேற்கதக்கது.
எதிர்காலத்தை வகுக்கும் எதிர்கட்சிகள் கூட்டத்துக்கு கி. வீரமணி வரவேற்பு! - சோனியா காந்தி
சென்னை: "எதிர்காலத் திட்டத்தை வகுப்பதற்காக மே. 23ஆம் தேதி காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரவேற்கத்தக்கது" என்று, திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக, ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்றாலும் கூட, இத்தகைய முன்னேற்பாடு நல்லதே! மூன்றாவது அணி என்ற சிலரது நாக்கில் தேன் தடவியோ, மூக்கைச் சொறிந்து விட்டோ எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சிதைக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் தந்திரங்களை முறியடியத்துள்ளோம். இதற்காக காங்கிரஸ், தனது பிரதமர் வேட்கையையும் விட்டுக் கொடுக்கவும், தாராளமாகத் தயாராக இருப்பதும் என்பது காலத்தால் எடுக்கப்பட்ட சமயோஜித சரியான முடிவு.
எங்களுக்குப் பிரதமர் பதவி முக்கியமல்ல; நாட்டை பாசிசப் பாதையில் கொண்டு செல்ல கங்கணம் கட்டிக்கொண்டு திட்டமிடும் காவிக் கும்பலின் ஜனநாயக விரோத, மதச்சார்பு தன்மையைக் குழிதோண்டிப் புதைக்க முற்படும் பாசிச ஆட்சி மீண்டும் எந்த ரூபத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு’’ என்ற காங்கிரசின் முடிவு சரியான அரசியல் நடவடிக்கையாகும். மே.23 அன்று சோனியா காந்தி அழைத்திருக்கின்ற கூட்டத்திற்கு அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்கள், இடதுசாரிகள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்த செயல் முற்றிலும் வரவேற்கதக்கது, என்று கூறப்பட்டுள்ளது.