செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். பல நாடுகளிலிருந்து வரும், பல்லாயிரக்கணக்கான பறவைகள், இங்கு சில மாதங்கள் தங்கி, குஞ்சுகள் பொறித்து பின்பு அவற்றுடன் தாயகம் திரும்புவது வழக்கம்.
சீசன் நேரங்களில் இப்பறவைகளைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பறவை மற்றும் இயற்கை ஆர்வலர்களும் வந்து செல்வர். இதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது வேடந்தாங்கல் ஏரியாகும், இந்த ஏரி 16 அடி ஆழமுள்ளது. தற்போது இந்த ஏரி தனது முழுக் கொள்ளளவைத் தாண்டி நிரம்பியுள்ளதால், ஏரியிலிருந்து நீர் வெளியேறி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று டிச.05ஆம் தேதி காலை ஆறு மணியிலிருந்து, இன்று டிச.06ஆம் தேதி காலை ஆறு மணி வரை, மொத்தம் 222.30 மி.மீ.,மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.