ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளும், ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜூ, பேராசிரியை பாத்திமா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வில் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரையில் 28 நாட்கள் விசாரிக்கப்பட்டது.
இதற்கிடையே நீதிபதி சிவஞானம் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். அத்துடன் ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி சிவஞானம், நீதிபதி தாரணி அமர்வு விசாரிக்கும் என முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, நிர்வாக உத்தரவை பிறப்பித்தார்.