சென்னை:சென்னையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய வாகனப் போக்குவரத்தைத் தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர, மற்ற வாகன போக்குவரத்திற்கு 01.01.2022 அன்று காலை 05.00 மணி வரை அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.