சென்னை:அனைத்து கால்நடை சந்தை வியாபாரிகள் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினருடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு, "தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து மாடுகளை வாங்கி வந்து தமிழ்நாடு, கேரளா கால்நடை சந்தைகளில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
அதுபோல மாடுகளை ஏற்றி கொண்டு திருப்பூர் வழியாக வரும் போது இந்து மக்கள் முன்னணியை சேர்ந்த தமிழ்செல்வன் வாகனத்தை வழிமறித்து பசுமாட்டை கடத்தி செல்வதாக கூறி ரூ. 10 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். ஓட்டுனர் கொடுக்க மறுத்ததால் மாட்டை கடத்துவதாக திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.