தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக மே.18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற தேர்தல் தினத்தன்று சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற கலவரம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் ஒரு தரப்பினர் இருக்கும் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
பொன்பரப்பி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் அலுவலரிடம் மனு - chidhambaram
சென்னை: "சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து மே21 ஆம் தேதிக்குள் தமிழகத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்" என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொன்பரப்பியில் தேர்தல் நடத்துவது குறித்து மே.21ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வழக்கு தொடுத்த பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த இளைஞர் விஷ்ணுராஜ் ஆகியோர் தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹுவை தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், பொன்பரப்பியில் தேர்தல் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்திருந்தனர்.