தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உ.பியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசத்திற்கே கேடு விளைவிக்கும் - திருமாவளவன் - கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பு குறித்து திருமாவளவன்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது ஒட்டுமொத்த தேசத்திற்கே கேடு விளைவிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால் தேசத்திற்கே கேடு விளைவிக்கும் ஆபத்தாகும் - திருமாவளவன் VCK Thirumavalavan Says If BJP comes back to power, there is a danger of harming country ,பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால் தேசத்திற்கே கேடு விளைவிக்கும் ஆபத்தாகும் - திருமாவளவன்
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால் தேசத்திற்கே கேடு விளைவிக்கும் ஆபத்தாகும் - திருமாவளவன் VCK Thirumavalavan Says If BJP comes back to power, there is a danger of harming country , பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால் தேசத்திற்கே கேடு விளைவிக்கும் ஆபத்தாகும் - திருமாவளவன்

By

Published : Mar 9, 2022, 8:46 AM IST

சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அல் ஷிபா கப்பிங் சிகிச்சை நிறுவனம் சார்பில் 100 பெண்களுக்குச் சிறப்பு கப்பிங் சிகிச்சை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அல் ஷிபா சிகிச்சையகத்தின் நிறுவனர் மருத்துவர் பெனாசிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எழில் கரோலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல் .திருமாவளவன், "பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பெண்களுக்கான கல்வியை 100% இலவசமாக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி திமுக கூட்டணியில் நகராட்சித் தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தாலும் திமுக உடனான பேச்சுவார்த்தையில் நடைமுறை சிக்கலைப் புரிந்துகொண்டு நகர மன்ற துணைத் தலைவர் பொறுப்பை ஏற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி இசைவளித்து இருக்கிறது.


தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உத்திர பிரதேசத்தில் பாஜக தோற்றுப் போகலாம் அல்லது தொங்கு சட்டமன்றம் அமையலாம் என்று நான் கருதுகிறேன்.


உத்தரப்பிரதேசத்தில் தப்பித் தவறி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது உத்தரப் பிரதேசத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திற்கே கேடு விளைவிக்கும். . ஊராட்சி மன்ற தலைவர், நகராட்சித் தலைவர், மாநகராட்சி தலைவர் போன்ற பதவிகளில் உள்ள பெண்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். அவ்வாறான பதிவுகளில் இருக்கும் இடங்களில் ஆண்களின் தலையீடும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.


கோகுல்ராஜ் கொலை வழக்கை ஆணவக்கொலையாக மட்டும் பார்க்காமல், அது ஒரு பயங்கரவாத நடவடிக்கையாகப் பார்க்கவேண்டும். கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மட்டுமல்லாமல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் மூலமும் தண்டனை வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் கருத்துக்கணிப்புகள் 2022: குஷியில் பாஜக... கவலையில் காங்கிரஸ்..

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details