தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து என்ற அடையாளத்தை கட்டாயப்படுத்தக்கூடாது - விசிக சிந்தனை செல்வன்

இந்து ஆதிதிராவிடர் என்பதற்குப் பதிலாக ஆதிதிராவிடர் தமிழர் மரபு ஆதிதிராவிடர், பௌத்த மரபு ஆதிதிராவிடர், வள்ளலார் மரபு என தங்களை தாங்களே பண்பாட்டு வழி அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமையை வழங்க வேண்டும் என்றும், இந்து என்ற அடையாளத்தைக் கட்டாயப்படுத்தக்கூடாது என விசிக சட்டப்பேரவை குழுத் தலைவர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.

vck-sinthanai-selvan-says-identity-of-hindu-adi-dravidar-brings-pain-and-identity-of-hindu-should-not-be-forcedஇந்து ஆதிதிராவிடர் என்ற அடையாளம் வலியை தருகிறது.. இந்து என்ற அடையாளத்தை கட்டாயப்படுத்தக்கூடாது - விசிக சிந்தனை செல்வன்
vck-sinthanai-selvan-says-identity-of-hindu-adi-dravidar-brings-pain-and-identity-of-hindu-should-not-be-forced இந்து ஆதிதிராவிடர் என்ற அடையாளம் வலியை தருகிறது.. இந்து என்ற அடையாளத்தை கட்டாயப்படுத்தக்கூடாது - விசிக சிந்தனை செல்வன்

By

Published : Apr 19, 2022, 9:15 AM IST

Updated : Apr 19, 2022, 10:52 AM IST

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கியது. இதில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 14 ஆம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று (ஏப்ரல்.18) மீண்டும் தொடங்கியது.

சட்டப்பேரவையில் ஏழாம் நாளான நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை குழுத் தலைவரும், காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினருமான சிந்தனை செல்வன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விஏஓ கல்வி தகுதி : அப்போது பேசிய சிந்தனை செல்வன், "கிராம ஆட்சி நிர்வாகம் சிறப்பாக நடைபெற கிராம ஆட்சி நிர்வாக அலுவலர் (விஏஓ) கிராமத்திலேயே தங்கி இருக்க வேண்டும். அதற்கு அரசு குடியிருப்பு அவசியமானது. ஆகவே அனைத்து வருவாய் கிராமங்களிலும் அதற்கான குடியிருப்பைக் கட்டி தந்து விஏஓ கிராமத்தில் தங்கியிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அவர்களின் அடிப்படை கல்வித் தகுதியான பத்தாம் வகுப்பு என்பதை இளநிலை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும். தரவுகளின் அடிப்படையில் நிர்வாக மேலாண்மையைச் செம்மை படுத்திட வேண்டும்.

வறுமைக்கோடு BPL என்பது பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான அடிப்படை தரவாக அமைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் பயிற்சி பெறாத குழுக்களை அமைத்து எடுக்கப்பட்ட இந்த புள்ளி விவரங்களை உடனடியாக மீளாய்வு செய்து மறு கணக்கெடுப்பு செய்ய வேண்டும். மேலும் இதற்கான நிபந்தனைகளை அல்லது தகுதிகளை காலத்துக்கு ஏற்ற வகையில் மறு வரையறை செய்ய வேண்டும்.

இந்து என்ற அடையாளத்தை கட்டாயப்படுத்தக்கூடாது - விசிக சிந்தனை செல்வன்

அனைவருக்கும் மனைப்பட்டா என்ற கொள்கையை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மனைப்பட்டா விவகாரத்தில் நீதிமன்ற குறுக்கீடுகள் இல்லாத வகையில் புதிய சட்டம் உருவாக்க வேண்டும். வேளாண் நிலங்களை விற்பனை நோக்கில் மனைப்பிரிவாக மாற்றும் வரைமுறையற்ற ரியல் எஸ்டேட் வணிகத்தை முறைப்படுத்த வேண்டும். வேளாண் நிலங்கள் அவசியமற்ற வகையில் வணிக மனைப்பிரிவு நிலங்களாக மாற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

சாதி சான்றிதழ்:அறுபது வயது நிறைவடைந்த அனைத்து நிலமற்ற மக்களுக்கும் முதியோர் ஓய்வு திட்டம் உறுதி செய்யப்பட வேண்டும். ஆண் பிள்ளை இருந்தால் ஓய்வு ஊதியம் இல்லை என்கிற நிபந்தனையை முழுவதுமாக நீக்க வேண்டும். பழங்குடி மக்கள் மலைவாழ் மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு அறிவது தொடர்கதையாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதியில் வசித்து வரும் புலையர் சமூகம், குறவன், மலைக்குறவன், குறவர் ஆகிய தொல்குடிகள் குருமன்ஸ், குறும்பர் எனப்படும் பல பழங்குடி சமூகங்களும் இத்தகைய இடர்பாடுகளை எதிர்கொள்ளும் அவல நிலையை மாற்றி அவர்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்.

சட்டப்பேரவை

அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமை: இந்து ஆதிதிராவிடர் என்ற அடையாளம் வலியை தருகிறது. சமயம் சார்ந்த இந்த அடையாளத்தை வருவாய் நிர்வாகம் தான் வழங்குகிறது. இந்து ஆதிதிராவிடர் என்பதற்குப் பதிலாக ஆதிதிராவிடர் தமிழர் மரபு ஆதிதிராவிடர், பௌத்த மரபு ஆதிதிராவிடர், வள்ளலார் மரபு என தங்களை தாங்களே பண்பாட்டு வழி அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமையை, பட்டியல் வகுப்பாருக்கு வழங்க வேண்டும். இந்து என்ற அடையாளத்தைக் கட்டாயப்படுத்தக்கூடாது.

சென்னை மாநகரில் உள்ள ஜிம்கானா கிளப், காஸ்மோபாலிட்டன் கிளப், பிரசிடென்சி கிளப்,கிண்டி ரேஸ் கிளப் ஆகியன உறுப்பினர் சேர்க்கைக்கு 7 லட்சம் முதல் 12 லட்சம் வரை வசூலிக்கின்றன. இந்த கிளப்புகள் குறைந்தது மூன்று ஏக்கர் தொடங்கி முப்பத்தி ஐந்து ஏக்கர் வரை நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்து இந்த நடைமுறையை மாற்றியமைத்து அந்த நிலங்களைக் கையகப்படுத்தி ஏழை எளிய மக்களின் வாழ்வாதார திட்டங்களைச் செயல்படுத்திட அரசு புதிய கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும்.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர்

மின் இணைப்பு வழங்க வேண்டும்:நீலகிரி மாவட்டத்தில் சுமார் 11 தேயிலை பெருந்தோட்ட நிறுவனங்களில் இதுவரை அரசுக்கு 4000 கோடி ரூபாய் குத்தகை பாக்கி செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர். அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். கூடலூர் ஓவேலி பேரூராட்சியில் 10 ஆயிரம் குடும்பங்கள் செக்ஷன் 17 வகைப்படி வருவாய் நிர்வாகத்தால் கருதப்படுவதால் கடந்த 25 ஆண்டுகளாக அங்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. கருணாநிதி காலத்தில் இருந்த ஒப்புதல் சீட்டு நடைமுறையைப் பின்பற்றி அந்த குடும்பங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அனைத்து சான்றிதழ்களையும் செல்போன் மூலமாக விண்ணப்பிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

Last Updated : Apr 19, 2022, 10:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details