சென்னை:தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிந்தனைச் செல்வன், 'தஞ்சாவூரில் நடந்த சிறுமி தற்கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் இருக்கும் நிலையில், சொந்தக் கருத்துகள் ஏராளமாகப் பதிவு செய்யப்படுகிறது. அவை பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்குகின்றன. ஆகவே, இவற்றை முறைப்படுத்த வேண்டும் என்ற ஒரு கருத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக பேரவையில் முன்வைக்கப்பட்டது.
அதிமுக உறுப்பினர்கள் பலர் தாலிக்குத் தங்கம் திட்டம் அரசியல் காரணமாக திரும்பப் பெறப்பட்டது எனக் கூறிய நிலையில், அது பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்று முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.