தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பலவீனப்பட்டால் சனாதன சக்திகள் வலிமை பெறும் - திருமாவளவன் - VCK President Thirumavalavan SAYS If AIADMK is weak Sanatana forces will gain strength

அதிமுக பலவீனப்பட்டால் சனாதன சக்திகள் வலிமை பெறும் என்றும், அதற்கு இடம் கொடுக்காமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

vck-president-thirumavalavan-says-after-jayalalithaa-demise-aiadmk-is-with-bjp ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக குடுமி பாஜகவிடம் உள்ளது OR அதிமுக பலவீனப்பட்டால் சனாதன சக்திகள் வலிமை பெறும் - திருமாவளவன் பேட்டி
vck-president-thirumavalavan-says-after-jayalalithaa-demise-aiadmk-is-with-bjpஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக குடுமி பாஜகவிடம் உள்ளது OR அதிமுக பலவீனப்பட்டால் சனாதன சக்திகள் வலிமை பெறும் - திருமாவளவன் பேட்டி

By

Published : Jun 25, 2022, 10:04 AM IST

சென்னை:நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என இஸ்லாமியர் சமூகத்தினர் போரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போரூர் மற்றும் மதுரவாயல் சுற்றுவட்டார பள்ளிவாசல்களின் கூட்டமைப்பு' சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத அரசு பாஜக, விவசாயிகளின் போராட்டத்திற்கு கூட ஓராண்டு காலம் மேல் அலட்சியம் செய்தார்கள். இந்து சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் அதிக அளவில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜகவினரைக் கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடுகிறார்கள். பிடிவாதமாக அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி தீருவோம் என இருக்கிறார்கள். இதனை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. அதிமுக பலவீனப்பட்டால் சனாதன சக்திகள் இங்கே வலிமை பெறும். அதற்கு இடம் கொடுக்காமல் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக குடுமி பாஜகவிடம் உள்ளது என்பதை அனைவரும் அறிந்த உண்மை. அதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் இல்லத்தில் பாஜக தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் நேரில் சென்று நேற்று முன்தினம் பார்த்துள்ளனர். இது அதிமுகவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் நல்லது அல்ல அதிமுக, பாஜக தலைமையாக இருக்க கூடாது" என்றார்.

இதையும் படிங்க:'அதிமுகவின் பொதுக்குழு சர்ச்சை முதல் திமுகவின் வாரிசு அரசியல் வரை...' - சி.வி. சண்முகம் அதிரடி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details