தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முரசொலியோ, சிறுதாவூரோ பஞ்சமி நிலமாக இருந்தால்... ஆணையம் செயல்பட ஆணையிடுங்கள் முதலமைச்சரே!' - பஞ்சமி நிலம் கண்டுபிடுப்பு

சென்னை: பஞ்சமி நிலம் குறித்த விவாதம் வலுத்துவரும் நிலையில் முரசொலி அலுவலகமாக இருந்தாலும் சரி சிறுதாவூர் அரண்மனையாக இருந்தாலும் சரி, அவை பஞ்சமி நிலம்தானா என்பதைக் கண்டறிய முதலமைச்சர் ஆணையிட வேண்டும் என்று தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

thol.thirumavalavan

By

Published : Oct 19, 2019, 5:13 PM IST

தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பில் விடுதலை ஞாயிறு சிறப்புக் கருத்தரங்கம் சென்னை கெல்லீஸிலுள்ள லைட் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "காங்கிரஸ் ஆண்டாலும் சரி பாஜக ஆண்டாலும் சரி வெளியுறவுக் கொள்கை சிங்களவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்பது நாம் உணர வேண்டிய ஒரு உண்மை. அதன் அடிப்படையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஏழு பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது பொய்த்துப்போனது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

பஞ்சமி நிலம் குறித்து பேசிய திருமாவளவன்

ராஜேந்திர பாலாஜி விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், "சிறுபான்மை மக்கள் குறித்து தான் பேசவில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுத்துவருகிறார். ஆனால், அவர் அவ்வாறு பேசியிருக்க வாய்ப்புள்ளது. அதிமுக அரசு பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு பாஜகவிற்கு ஒத்து ஊதக்கூடிய அரசாக இருந்துவருகிறது. அமைச்சர்களும் அதற்கேற்றாற்போல் கருத்து தெரிவிக்கின்றனர். இதில், ராஜேந்திர பாலாஜியின் வாய்ஸ் என்பதைவிட பாஜகவின் வாய்ஸ் என்றே கூற வேண்டும்" என விமர்சித்துப் பேசினார்.

பஞ்சமி நிலம் விவகாரம் குறித்து பேசிய அவர், பஞ்சமி நிலங்களைக் கண்டறிய வேண்டிதான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆணையம் ஒன்றை நியமித்ததைக் குறிப்பிட்டார். ஆனால், அந்த ஆணையம் தற்போது அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பஞ்சமி நிலங்களைக் கண்டறிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த திருமாவளவன், அது முரசொலி அலுவலகமாக இருந்தாலும் சரி சிறுதாவூர் அரண்மனையாக இருந்தாலும் சரி - எதுவாக இருந்தாலும் அவையெல்லாம் பஞ்சமி நிலம்தானா என்பதை கண்டறிவதற்கு கருணாநிதி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஆணையத்தை செயல்பட அனுமதிக்க ஆணையிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: 'நில அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே?' - ஸ்டாலினை சீண்டும் ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details