தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசிக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! - Vck party members attacked in Chennai

சென்னை: பத்து பேர் கொண்ட கும்பல் வெட்டியதில் விசிக பிரமுகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விசிக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
விசிக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

By

Published : Aug 16, 2020, 2:58 PM IST

சென்னை தண்டையார்பேட்டை வீரா குட்டி தெருவைச் சேர்ந்தவர் கேசவன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஆக. 15) கேசவன் தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, பத்து பேர் கொண்ட கும்பல் கேசவனை தலையில் வெட்டி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், கேசவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கேசவன் உறவினர்கள், அப்பகுதியில் உள்ள ஐந்து வீடுகளை சேதப்படுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதையும் படிங்க...மதுபானக் கடையில் ரூ.5.39 லட்சம் திருடிய ஊழியர்கள் இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details