தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது காவல்துறை அத்துமீறி தாக்குதல் - திருமாவளவன் - Cops beat on Islamists

சென்னை: வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

thriumavalavan
thriumavalavan

By

Published : Feb 17, 2020, 9:38 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்துகள், குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க பெறப்பட்ட கையெழுத்துகள் அனைத்தும் சென்னை அண்ணா அறிவாலயத்திலிருந்து அனுப்பப்பட்டன. இந்த நிகழ்வில் திமுக தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடி வரும் இஸ்லாமியர்கள் மீது காவல்துறை அத்துமீறி தடியடி நடத்தியுள்ளது. இதற்கு காரணமான அலுவலர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தடியடி தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்" என்றார்.

காவல்துறை மீது குற்றம்சாட்டிய திருமா

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க பாடுபட வேண்டும் - கே.பி. அன்பழகன்

ABOUT THE AUTHOR

...view details