தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அதிமுகவையும் பாமகவையும் பயன்படுத்தி பாஜக காலூன்ற துடிக்கிறது" - தொல் திருமாவளவன் - மக்கள் நீதி மய்யம்

அதிமுக மற்றும் பாமகவை பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜகவை தடுப்போம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

தொல் திருமாவளவன்
தொல் திருமாவளவன்

By

Published : Jan 27, 2023, 7:17 AM IST

தொல் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மூன்று மாநில தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் போரூரில் நேற்று (ஜனவரி 27) நடைபெற்றது. இதில், அக்கட்சியில் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துக்கொண்டு கலந்தாய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொல் திருமாவளவன், “ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வென்ற தொகுதி இது. மறைந்த திருமகன் ஈவேரா-வின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற அடிப்படையில் விடுதலை சிறுத்தை கட்சியும், ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிக்கு பாடுபடும்.

சனாதன சக்திகள் இந்த மண்ணில் வேரூன்ற பல வகைகளில் முயற்சித்து வருகிறார்கள். அதிமுக மற்றும் பாமக-வை பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜக-வை, காலூன்ற விடாமல் தடுத்து, அவர்களின் சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், நடிகர் கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்து பாராட்டுகிறோம். இது இடைத் தேர்தலுக்கு ஆதரவு என்பதனை விட, சனாதன சக்திகளை விரட்டியடிப்பதற்கு கை கோர்க்க கூடிய களமாட கூடிய ஒரு செயல் திட்டத்திகான முன்னெடுப்பு” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக பாமக போன்ற கட்சிகளை ஆதரவாகக் கொண்டு பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக தொண்டர்களும் பாமக தொண்டர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்களுடைய சுயநலன்களுக்காக தலைவர்கள், இந்த இயக்கத்தையே அடமானம் வைக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

இந்த மண்ணில் பாஜக-வை வளர்க்க துணை போகிறார்கள். இது அனைத்து வகையிலும், பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவினரை பாதிக்கச் செய்யும் என்பதை விடுதலை சிறுத்தை கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

அதிமுக-வில் உட்கட்சி பூசல் தொடர்ந்து நீடிக்கிறது. அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அவர்களது முதுகில் சவாரி செய்ய பாஜக திடர்ந்து முயசிக்கிறார்கள். ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் தங்களுக்கு இடையிலான தலைமை விவகாரத்தில் ஒட்டுமொத்த அதிமுக அரசியல் கட்சியை பாஜகவின் முயற்சிகளுக்கு இறையாக்கி விடுவார்களோ என்கிற ஒரு சூழல்தான் இன்றைக்கு தெரிகிறது. இதை அதிமுக தொண்டர்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உண்மையாக எம்ஜிஆர் தொண்டர்களாகவும், ஜெயலலிதாவை பின்பற்ற கூடியவர்களாகவும் இருக்கிற அதிமுக தொண்டர்கள், சங்பரிவார்களுக்கு ஒருபோதும் துணை போகமாட்டார்கள் துணை போகவும் கூடாது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். எடப்பாடி என்ன முடிவு எடுக்கிறார்? ஓபிஎஸ் என்ன முடிவு எடுக்கிறார்? என்பதை விட அதிமுக தொண்டர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள்? என்பது தமிழ்நாட்டு நலன்களோடு தொடர்புடையது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது” என்றார்.

இதையும் படிங்க: ஆளுநரின் தேநீர் விருந்து - புன்முறுவலுடன் பங்கேற்ற முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details