விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது -திருமாவளவன் - VCK
சென்னை: பாஜகவின் கூட்டணி கட்சி என்ற முறையில் மத்திய அரசின் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிப்பது அதிர்ச்சி அளிப்பதாக சிதம்பரம் தொகுதி எம்.பி திருமாவளவன் கூறியுள்ளார்.
”மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் பல்வேறு மசோதாக்களை பாஜக அரசு பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு நிறைவேற்றிக்கொள்கிறது. குறைந்தபட்ச ஜனநாயக அணுகுமுறைகூட ஆளும் பாஜக அரசிடம் இல்லை என்பது நடந்துகொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் மூலம் தெளிவாக தெரிகிறது.
பாஜகவின் இத்தகைய போக்கை மக்களுக்கு தெரியப்படுத்த மட்டும்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, எதிர்க்கட்சிகளால் வேறு எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நாடாளுமன்றம் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. பாஜகவின் கூட்டணி கட்சி என்ற முறையில் மத்திய அரசின் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.