சென்னை:சென்னை அருகே குடும்பத் தகராறில் சித்தப்பாவை, அண்ணன் தம்பிகள் இணைந்து திட்டமிட்டு படுகொலை செய்த சம்பவம் குன்றத்தூர் தாரப்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலை செய்யப்பட்டவர் விசிக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
குன்றத்தூர் அடுத்த தாரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அதிஷ்(29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், இவரது அண்ணன் மகன்களான சுகாஷ்(25), சுனில்(22) ஆகிய இருவரும் அதிஷிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இந்த தகராறு முற்றிய நிலையில், சகோதரர்களான சுகாஷ், சுனில் ஆகிய இருவரும் அதிஷை தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதனைத் தடுக்க முயன்ற அதிஷின் அண்ணன்களான முரளி(33), சுகுமார்(38) உள்ளிட்டோர்களுக்கும் பயங்கர வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.