இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து தமிழ்நாட்டில் இதுவரை மூன்று மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
நீட் தேர்வு விலக்கு - அரசுக்கு விசிக வலியுறுத்தல்!
சென்னை: தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாணவர்களின் உயிர்களை இனிமேலும் காவு வாங்காமல் இதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும். அதற்கு ஆளும் அதிமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
நீட் தொடர்பான மரணங்களுக்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம். இனியாவது, பாஜக அரசு தனது தவறை உணர்ந்து தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.