சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பெகாசஸ் உளவு செயலி மூலம் ஒட்டுக்கேட்கும் விவகாரத்தில் நீதிக்குப் புறம்பாக செயல்பட்ட இந்திய உள்துறையின் முன்னாள் செயலாளர்கள், பெகாசஸ் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கு அனுமதி கேட்டு இந்திய அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
அதற்கு பதிலளித்துள்ள அட்டர்னி ஜெனரல், இந்தப் பிரச்னை நீதிமன்ற விசாரணையில் இருப்பதாலும், குற்றம் நடந்திருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க முடியாததாலும் இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கு அனுமதி வழங்க இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.