தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தடா பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - விசிகவினர் புகார் - விசிக

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறான வகையில் பேசிய தடா பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தடா பெரியசாமி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
தடா பெரியசாமி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

By

Published : Feb 16, 2023, 10:52 PM IST

தடா பெரியசாமி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை:அண்மையில் திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்பாக பாஜக பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரியசாமி என்பவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட ஊடகப்பிரிவு சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில், “தடா பெரியசாமி, தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக ஒத்துக் கொள்ளும் வகையில் வீடியோவில் பேசியிருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவன் தொடர்பாக அறுவருக்கதக்க வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் பேசியுள்ளதால் தடா பெரிய சாமி மீது சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளதால் அது தொடர்பாக தனியாக தமிழ்நாடு காவல் துறையினர் விசாரிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “திருமாவளவன் குறித்து விமர்சனம் செய்தால் போதும் அரசியலில் பிரபலமடைந்து விடலாம் என்ற நோக்கத்தில் தடா பெரியசாமி உட்பட பலர் திரிந்து வருகின்றனர். தடா பெரியசாமி 8 ஆண்டுகள் மட்டுமே விசிகவில் பணியாற்றிவிட்டு 30 ஆண்டுகள் என பொய்யான தகவலை பரப்பி வருகின்றார்” என கூறினார்.

இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உறுதி

ABOUT THE AUTHOR

...view details