தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகை காயத்ரி ரகுராமை கைது செய்யக் கோரி விசிக புகார்! - விடுதலை சிருத்தைக் கட்சி

சென்னை: நடிகை காயத்ரி ரகுராமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.

செய்தியாற்களை சந்தித்த விசிகவினர்

By

Published : Nov 19, 2019, 7:08 PM IST

அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்துக் கோயில்களின் சிலைகள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருமாவளவன் குறித்து, நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவதாகக் கூறப்படுகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த விசிகவினர்

மேலும், திருமாவளவன் குறித்து எங்கு பார்த்தாலும் தகாத வார்த்தைகளால் காயத்ரி ரகுராம் திட்டியும் சாதி வெறியை தூண்டும் வகையில் பேசியும் வருகின்றார். இதனால் காயத்ரி ரகுராமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்: கொதிக்கும் விசிக!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details