விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்டு உணவு உண்டனர்.
'இது முறையல்ல..!'- கிருஷ்ணசாமி மீது திருமா வருத்தம்! - krishnasamy
சென்னை: கிருஷ்ணசாமி அரசியல் தலைவராக இருந்துகொண்டு பொதுவெளியில் சாதி குறித்து பேசுவது வருத்தமளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "சாதிக்கு எதிராக பக்குவப்பட்ட தமிழ் மண்ணில் அரசியல் தலைவராக இருக்கும் கிருஷ்ணசாமி, பொதுவெளியில் சாதி குறித்து பேசுவது வருத்தமளிக்கிறது. மத்தியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாததால் எதிர்க்கட்சியாக இருந்துக் கொண்டு மக்கள் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டிய பெரும் பணி திமுக தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கிறது" தெரிவித்தார்.