தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சனாதனம் தவிர்த்து சமத்துவம்" - பங்காரு அடிகளாரை பாராட்டிய திருமாவளவன் - melmaruvathur bangaru adigalar death

Bangaru Adigalar: மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் மறைவுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பங்காரு அடிகளார் மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்
பங்காரு அடிகளார் மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 6:51 PM IST

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆன்மீக சீர்திருத்தவாதியாகத் திகழும் பங்காரு அடிகளார்(82) நேற்று (அக்.19) காலமானார். அவரது மறைவு, அவரது பத்தர்கள் மத்தியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பங்காரு அடிகளாரின் பக்தர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளத்திலும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர், பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக "ஆன்மீகத் தளத்தின் சமூகநீதி அடையாளம் பங்காரு அடிகளார்!" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அற்கையில் கூறியிருப்பதாவது, "அம்மா என்று செவ்வாடை பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சித்தர் பீடத்தின் நிறுவனர் திருமிகு.பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துவதோடு, அவரது மறைவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களைத் துவக்கி, பெண்களே கோயிலின் கருவறைக்குள் சென்று பூசை செய்வதற்கு வழிவகுத்தார். ஆண்கள் மட்டுமே கோயிலின் கருவறைக்குள் நின்று பூசை செய்யமுடியும் என்கிற நெடுங்காலத்து நடைமுறையை மாற்றி பெண்களைப் பூசை செய்ய வைத்ததோடு, மாதவிடாய்க் காலத்திலும் கோயிலில் சென்று வழிபடலாம் என்கிற அவரது நிலைபாடு. ஆன்மீகத் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அது வெகுவாகப் பெண்களை ஈர்த்தது மட்டுமின்றி, ஆன்மீகத்திலும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தியது. இது பக்தியை சனநாயகப்படுத்திய ஆன்மீகப் புரட்சி என்று கூறத் தக்கதாகும். ஆன்மீகப் பணியோடு பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி கல்விப் பணிகளையும் அவர் மேற்கொண்டார்.

கல்வியில் பின் தங்கியிருந்த செங்கல்பட்டு உள்ளிட்ட அப்பகுதி, தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும். இந்திய அளவில் ஆன்மீகத்தின் ஒரு மாற்று அடையாளமாகத் திகழ்ந்தவர். சனாதனப் பாதையைத் தவிர்த்து இந்து மதத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியவர். அத்தகைய சிறப்புகளுக்குரிய அடிகளாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவருக்கு எமது அஞ்சலியைத் செலுத்துகிறோம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: பங்காரு அடிகளாரின் மறைவு; மலேசியாவில் இருந்து இரங்கல் தெரிவித்த தேவா!

ABOUT THE AUTHOR

...view details