இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்ட நிலையில் இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
எழுவர் விடுதலை: உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது... எகிறும் திருமா! - thirumavalavan
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் வாடும் ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
thiruma
அதேபோல், ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஒன்பது மாதங்களாக எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாகவும், இனியும் காலம் தாழ்த்தாமல் அந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.